கிறிஸ்துவின் வருகையில் அடுத்தடுத்து நடப்பது என்ன

 (406) உயர்ந்த முத்துக்கள்.

பரிசுத்தமான கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் வருகையில் உயிரோடு எழும்பும் பொழுது அடுத்தடுத்து நடப்பது என்ன. ?

(1 தெசலோ 4:16)

இதை அறிவதற்கு முன்பு சில காரியங்களை நாம் பார்த்து விட்டு அடுத்த காரியங்களுக்கு தொடர்ந்து பயணிப்போம்.

ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் சிந்திக்க வேண்டியவைகள். எந்த மார்க்கத்திலும் சொல்லப்படாத ஒன்றை இயேசு கிறிஸ்து மூலமாக பிதாவாகிய தேவன் நமக்குச் சொல்லியிருக்கிறார். அதுதான் கிறிஸ்து இயேசு மூலமாக கிடைக்கிற நித்திய வாழ்வு, அல்லது மறுவாழ்வு. இதுதான் கிறிஸ்தவர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாகும். 

(யோவா 5:24; 6:47,54; 17:3; ரோமர் 6:23; 1யோவா 1:2; 5:11,13)

இந்த, நித்திய நம்பிக்கை தேவனுடைய வசனத்தை உறுதியாக விசுவாசிக்கிறவர்களிடம் தான் இருக்கும்.(அப் 13:48).

(1) இந்த பரம சிலாக்கியத்தை அடைவதற்கு முதலாவது பாவத்திற்கு மரணம், நீதிக்கு பிழைத்தவர்களாக இருக்க வேண்டும். (ரோம் 6:11,13)

தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருப்பவர்கள், தேவனுடைய ராஜ்யத்தை சுதந்திரமாக்க முடியாது.

(1கொரி 6:9-10;கலா 5:21)

நித்திய ஜீவனை சுதந்திரமாகக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பது எளிது. (மாற் 10:17; லூக் 10:25;18:18;) ஆனால், நீயும் போய் அந்தப்படியே செய்வது கடினம். (லூக் 10:37)

பாவத்தை விடுவது மாத்திரமல்ல தேவனுடைய ராஜ்யத்தை சுதந்திரமாக்குவதற்கு நமது ஆஸ்திகளையும் தேவனுக்காக ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும் வேண்டும். ஊழியங்களுக்கு மட்டுல்ல ஏழை எளிய மக்களுக்கு உங்கள் சொத்துக்களை பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார். இதைப் பவுல் அப்போஸ்தலன் சற்று வித்தியாசமாக சொல்கிறார். ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.

அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறியும் அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

(பிலிப்பியர் 3:6,8,11)

நித்திய வாழ்வு அல்லது நித்திய ஜீவனுக்கு ஈடாக எதுவுமே இல்லை இந்த நித்திய ஜீவனுக்கு அல்லது தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு முன்பாக நம்முடைய வாழ்க்கையில், பாவத்தின் சந்தோசமோ அல்லது இந்த உலகத்தில் இருக்கிற நமது ஆஸ்திகளின் சந்தோசமோ இவைகள் எல்லாம் குப்பை, குப்பை எனக் கூறுவதை காண முடிகிறது. இந்த குப்பையை சம்பாதிப்பதற்காக எத்தனை பொய், எத்தனை வேஷங்கள், எத்தனை கோலங்கள், 

இந்த பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனம் திரும்பி அவரைக் அண்டி கொள். விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமா ய். எனவே பரலோக நம்பிக்கை உடையவர்களே

அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரிக்கிறான்.(1யோவா 3:3; வெளி 21:27)

இதற்காகத்தான் இயேசு கிறிஸ்து தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பை நமக்கு உண்டு பண்ணி வைத்துள்ளார். (எபே 1:7; கொலே 1:14; 1பேது 1:18,19).

(2) நாம் இரத்தத்தினால் கழுவப்படவில்லை என்பதுதான் தெளிவான சத்தியம்.

பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் *இயேசுகிருஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு (மீட்கப்பட்டவர்களுக்கு)*

(1 பேதுரு 1:2) என வாசிக்கிறோம். 

இதைக் குறித்து அறியாதவர்கள் டெய்லி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் குளிக்கிறார்கள். தான் வைத்திருக்கிற வாகனத்தின் மேல் குடம் குடமாக ஊற்றி கழுவுகிறார்கள், காலையில் பக்கெட் பக்கெட்டாக வீடெல்லாம் தெளிக்கிறார்கள். சில சபைகளில் மாத மாதம் ரத்தத்தை குடிக்கிறார்கள், இப்படி என்னென்னவோ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர்கள் அறியாமை. மற்றவர்களை பார்த்து கற்றுக்கொண்ட காரியங்கள். வேதத்தை கவனிக்காமல் அதை தெளிவாக வாசிக்காமல் பயனடையாமல் போன பயனற்ற ஊழியர்கள். என்று நான் உறக்கச் சொல்லுவேன். 

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மில் தெளிவுபடுத்தப்படுவதற்கு நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம். தெரிந்துகொள்ள அவள் உள்ளவர்கள் எஸ் என்று சொல்லுங்கள். 

என்னுடைய வேதம் எனக்கு கற்றுக் கொடுத்ததை நான் எல்லாருக்கும் சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன். 


கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை