தெரியவே தெரியாது

 

*(402) உயர்ந்த முத்துக்கள்.*

*"உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்"*
(மத் 7:23)

இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் கீழ்க்கண்டவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. பிரசங்கிகள் 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நற்செய்தி'யை அறிவிப்பார்கள், அசுத்த ஆவிகளைத் துரத்துவார்கள். அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கோ கிறிஸ்துவின் மேல் இரட்சிப்புக்கெதுவான விசுவாசம் இருக்காது.

1) பரிசுத்த வேதாகமம் தெளிவாகப் போதிக்கிறது என்னவென்றால், இக்காலத்தில் ஊக்கமுள்ள சுவிசேஷ பிரசங்கமும், நீதிக்கான ஒரு போலியான வைராக்கியமும், அற்புதங்கள் செயல்படுதலும் சாத்தானின் வல்லமைனாலும் முடியும். எனவே தான் பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் இப்படி எச்சரிக்கிறார். *"சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரிய மல்லவே"*
(2கொரி 11:14,15; மத் 24:24) ஆவியானவர் பவுல் மூலமாக சாத்தானின் கிரியைகள் போலியான வல்லமை உள்ள அபிஷேகத்தினால் உண்டானது என்று கூறியிருக்கிறார்.
(2தெச 2:9,10;)

2) பல தடவைகளில் தேவன் கள்ளப் போதகர்களிலுள்ள சாத்தானின் கிரியையை முறியடித்துத் தம்முடைய வார்த்தைகளை உறுதியாய் பற்றி கொள்ளுகிறவர்களுக்கு இரட்சிப்பையும், வியாதிகளிலிருந்து குணமாக்குகளையும் கட்டளையிட்டிருக்கிறார்.
(பிலி 1:15-18) நற்செய்தியைக் அறிவிக்கிறவர்கள் எப்போதும் நீதிமான்களாக இருக்க வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம்.
(1தீமோ 3:1-7) எனினும்,
*ஒரு பொல்லாத அல்லது ஒழுக்கம் கெட்ட மனிதன் கர்த்தருடைய வசனத்தைப் போதிக்கும் போது, அதைக் கேட்கும் மக்களின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவரின் உதவியால் கிரியை செய்ய அனுமதிப்பார். விசுவாசிகள் கிறிஸ்துவின் முழு விசுவாசத்துடன் இந்த வார்த்தைகளை கேட்பதால் அவர்களுக்கு இந்த நன்மை கிடைக்கிறது. நல்ல ஊழியரோ அல்லது ஒழுக்கம் கெட்ட ஊழியர் மூலமாகவோ தேவனுடைய வார்த்தை வருகிறது அதை விசுவாசத்துடன் கேட்பவர்களுக்கு அற்புதம் நடக்கிறது, இந்த அற்புதம் தேவனை விசுவாசிப்பதினால் நடக்கிறது அந்த ஒழுக்கம் கெட்ட ஊழியினாலோ நல்ல ஊழியனாலோ நடக்கவில்லை இது உங்களுடைய விசுவாசத்தின் படி நடந்தது. ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறவனுக்கு புரியும். ஆமென் அல்லேலூயா. ஒழுக்கம் கெட்ட ஊழியனை கர்த்தருக்கு தெரியவே தெரியாது விசுவாசத்துடன் கேட்ட ஜனங்களை அவருக்கு தெரியும். (மத் 7:23) ஒருவர் மூலமாக அற்புதம் நடந்தாலே நம்முடைய பார்வைக்கு அவர் தேவ மனிதன். ஆனால் தேவனுடைய பார்வையில் ஒழுக்கம் கெட்ட ஊழியர்.
தேவன் எந்த அநீதியான ஊழியக்காரனையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், தேவனுடைய வேத சத்தியத்தையும் அதை உண்மையாய் ஏற்றுக்கொள்ளுகிறவர்களையும் அங்கீகரிப்பார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா
தொடர்புக்கு 98 41 711 591.



Comments

Anonymous said…
மிகவும் சரி நிதானிப்பவன் பாக்கியவான்கள்

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை