என்னை விட்டு நீங்க

 

*(401) உயர்ந்த முத்துக்கள்.*


*என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்.*

(மத் 26:39)


'இந்தப்பாத்திரம்' என்று இயேசு கிறிஸ்து கூறியது அதிகமான விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.


1) கிறிஸ்து தம்முடைய சரீர மரணத்தின்று காக்கப்பட வேண்டும் என்று ஜெபித்தாரா ?  என்பது சந்தேகத்திற்குரியது. 

ஏனெனில் மனித இனத்தின் பாவங்களுக்காக மரிப்பதற்கென்றே தீர்மானத்துடன் இவ்வுலகுக்கு அவர் வந்தார்.

(மாற் 10:33,34; லூக்கா 9:51;யோவா 12:24,27; எபி 10:5-9).


2) இயேசு கிறிஸ்து தேவனிடமிருந்து பிரிக்கப்படுதல் என்னும் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்தார் என்பது மிகவும் பொருந்தும். 

இதுவே பாவத்தின் இறுதியான தண்டனையாயிருந்தது. பாவிகளின் பாவங்களுக்காக, அவருடைய மாம்ச மரணம் முழுக்கிரயமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று இயேசு கிறிஸ்து ஜெபித்தார். எனினும், என்னுடைய சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆக கடவது என்று ஜெபித்தார். பின்னர் இயேசு கிறிஸ்து தமது மாம்ச சரீரத்தின் மரணத்துக்கும், ஆவிக்குரிய நிலையில் தமது பரலோக பிதாவிடமிருந்து, நம்முடைய இரட்சிப்புக்காக தாம் பிரிக்கப்படவும் அர்ப்பணித்தார். (மத் 27:46) அவருடைய ஜெபம் "கேட்கப்பட்டது" ஏனெனில் அவருடைய பரலோகப் பிதா, அவருக்கென்று நியமிக்கப்பட்ட இந்த பாத்திரத்தில் பானம் பண்ணும் படி அவரைப் பலப்படுத்தினார்.

(எபி 5:7)

சிலர் வாதிடுவது போல கிறிஸ்து மரணத்திற்கு பயந்து ஜெபிக்கவில்லை, இயேசு கிறிஸ்து முழு உலகத்தின் பாவத்தையும் தம்மேல் ஏற்றுக் கொள்ளும் போது தேவனிடமிருந்து பிரிக்கப்படுதல் என்னும் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்தார். அது கூட அவருடைய விருப்பத்தின் படி அல்ல பிதாவின் சித்தத்தின்படி ஜெபிக்கிறார். 


இன்றைக்கு நம்முடைய ஜெபங்கள், நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றும் படியாக இருக்கிறதா ?

அல்லது தேவ சித்தம் என் வாழ்க்கையில் நிறைவேறட்டும் என ஜெபிக்கிறோமா ?


சிந்தித்து கிறிஸ்துவின் வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா 

தொடர்புக்கு 9841711591

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை