அடுத்தடுத்து நடப்பது என்ன 2
(407) உயர்ந்த முத்துக்கள்.
உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ?
கடந்த நாள் முடிக்கும் பொழுது மீட்கப்பட்டவர்கள் மேல் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படும் (1பேது 1:2)
ஏற்கனவே நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பை பெற்றிருக்கிறோம்
(கொலே 1:14; எபே 1:7).
அடமானம் வைத்த பொருளை மீட்பது போல, இயேசு கிறிஸ்து மூலமாக, பிதாவாகிய தேவன் நம்மை மீட்டுக் கொண்டார். (கிறிஸ்துவின் இரத்தத்தை கிரயமாக செலுத்தி)
(1கொரி 6:20; 7:23).
ஆதாம் ஏவாள் இருவரும் பிசாசுக்கு இடங்கொடுத்து தம்மையும், வருங்கால சந்ததியையும், தேவன் ஆதாமுக்கு கொடுத்த சகல ராஜ்ஜியங்களையும், அதிகாரங்களையும், வல்லமையையும் சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டான்.
(லூக் 4:6; மத் 4:9)
இயேசு கிறிஸ்து, கல்வாரி சிலுவையில்(சர்வலோகத்தின் பாவத்திற்காக)
தம்முடைய கடைசி சொட்டு இரத்தத்தையும், சிந்தி, மரித்து ,அடக்கம் பண்ணப்பட்டு , மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு, அவர் சொன்னதை கவனிக்க வேண்டும். (மத்தேயு 28:18ஐ)
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (லூக்கா 19:10ஐ)
(ஆதாம் ஏவாள்) இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். உண்மையாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்களாக இருக்கிறோம்.
1)எப்படி நாம் கழுவப்படுகிறோம், கழுவப்படுதல் என்பதை விட சுத்திகரிக்கப்படுகிறோம்.
அநேக காரியங்கள் உண்டு. ஆனாலும் மிக முக்கிய
மூன்று விதமான சுத்திகரிப்பு அல்லது கழுவப்படுதலை பார்ப்போம்.
அ)மனந்திரும்புதல்+ஞானஸ்நானம் பெறுதல்.
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்றான். (அப்போ 22:16)
இரட்சிக்கப்பட்டவர்கள் (மனந்திரும்பினவர்கள்
1யோவா 1:8-9) ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
உண்மையான மனந் திரும்புதல் மற்றும் ஞானஸ்நானம் பெறுதல் கழுவப்படுவதற்கு சமம்.(யோவா 13:10)
ஆ) கிறிஸ்துவின் உபதேசத்தில் நாம் நிலைத்திருக்கும் பொழுது நாம் சுத்திகரிக்கப்படுகிறோம்.
(யோவா 15:3)
இ) பரிசுத்த ஆவியினாலே.
உங்களில் சிலர் (1கொரி6:9-10 வாசி) இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
(1 கொரி 6:11;எபி 10:22).
பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு
(ரோமர் 15:15; 2தெச 2:13;தீத்து 3:5; 1பேது1:2).
கிறிஸ்துவின் வருகை வரை நமக்கு இது தேவை.
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
(1 தெசலோ 5:23)
இப்படித்தான் நமக்கு சுத்திகரிப்பு அனுதினமும் நடந்து கொண்டிருக்கிறது. நான் சொல்ல வருவது வேதம் வாசிக்காதவர்களுக்கும், நித்திய நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், விளங்கவே விளங்காது. விளங்கிக் கொள்ளாதவர்களுக்கு என்னுடைய கருத்துக்கள் விவாதமாக மாறிவிடும்.
நீங்கள் சொல்லலாம்
இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது .?
சகல ............
பாவங்களையும்.....
கிறிஸ்துவின் ரத்தம் எப்பொழுது நம்மில் தெளிக்கப்படும். தெளிக்கப்பட்ட பின்பு என்னென்ன நடக்கும்.?
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா
Comments