திருச்சபையின் ஊழியங்களுக்கான ஆவிக்குரிய வரங்கள்.
திருச்சபையின் ஊழியங்களுக்கான ஆவிக்குரிய வரங்கள்: எபே 4:13 “அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் கவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.” கொடுக்கிறவர்: எபேசியர் 4:13 ஆம் வசனம் ஆவிக்குரிய வாங்களைப் பட்டியலிடுகிறது. (அதாவது வரம்பெற்ற ஆவிக்குரிய தலைவர்கள்) கிறிஸ்து இந்த வரங்களைத் திருச்சபைக்கென்று அளித்தார். கிறிஸ்து ஏன் இவற்றைக் கொடுத்தார் என்பதற்குப் பவுல் கூறும் காரணங்கள்: 1) தேவனுடைய மக்களை தேவனுடைய ஊழியத்துக்கென்று ஆயத்தப்படுத்த (4:12) 2) கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையின் தேல்னுடைய சித்தத்தின்படியான ஆவிக்குரிய வளர்ச்சிக்காக (4:13-16); அப்போஸ்தலர்கள்: சில புதிய ஏற்பாட்டு தலைவர்களுக்கு "அப்போஸ்தலர்' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 'அப்போஸ்டெல்லோ' என்னும் வினைச் சொல்லுக்கு, "அனுப்புகிறவருடைய தனிப்பிரதிநிதியாகவும், தூதுவராகவும், ஒரு சிறப்புப் பணிக்காக அனுப்பப்படுகிறவர்" என்று பொருள் உண்டு. இந்தப் பட்டம் கிறிஸ்துவுக்கும் (எபி 3:1) 12 சீஷர்களுக்கும், (10:2) பவலுக்கும் (ரோம 11, 2 கொரி1:1, கலா...