இரட்சிப்புக்கான வேதவார்த்தைகள்

ரோமர் 1:16 "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.


தேவன், இயேசுகிறிஸ்துவினால் நித்திய ஜீவனை நமக்கு இலவசமாகத் தருகிறார். ஆனால் அது நமக்குக் கிடைக்கும்படி சரியான முறையை அறிந்து கொள்வது சில வேளைகளில் நமக்குக் கடினமாக உள்ளது. ஆகவே தேவன், வேதாகமத்தில் இரட்சிப்புப்பற்றி, ஒவ்வொன்றும் தன் சொந்த தனிப்பட்ட முறையில் வற்புறுத்தும் வகையிலான பலதரப்பட்ட காட்சிகளைச் சித்தரிக்கிறார், இந்த கட்டுரை, அந்தக் காட்சிகளில் மூன்றான, இரட்சிப்பு, மீட்பு, நீதிமானாகுதல் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது.


இரட்சிப்பு: 

இரட்சிப்பு என்றால் (கிரே,) சொட்டேரியா ""விடுவித்தல்", "பத்திரமாகக் கொண்டுவருதல்", "தீமையினின்று பாதுகாத்தல்" என்று அர்த்தமாகும். ஏற்கெனவே பழைய ஏற்பாட்டில் தேவன் தம்மை, மக்களை இரட்சிக்கிற ஒருவராக வெளிப்படுத்தியுள்ளார். (சங் 27:1; 88:1;உபா 26:8; சங் 62:1;  ஏசா 25:6;53:5 குறிப்புகளை பார்க்கவும்) புதிய ஏற்பாட்டில் அது "வழி" அல்லது பரலோகத்தில் தேவனோடுள்ள நித்திய ஐக்கியத்திற்கு வழிநடத்தும் வாழ்க்கைப் பாதை என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. (மத் 7:14; மாற் 12:14; யோவா 14:16; அப் 16:17; 2 பேது 2:2,21;அப் 9:2; 22:4; எபி 10:20) இந்த இரட்சிப்பின் பாதையில் முடிவு பரியந்தம் நடக்க வேண்டும். நாம் இரட்சிப்பை மூன்று நிலையுள்ள, இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரே வழியாக விவரிக்க முடியும்.


1) இரட்சிப்பின் ஒரே வழி - பிதாவை அடைய ஒரேவழி கிறிஸ்து (யோவா 14:6; அப் 4:12) இரட்சிப்பு நமக்குத் தேவனுடைய கிருபையினால் அருளப்பட்டிருக்கிறது. அதை அவர் கிறிஸ்து இயேசுவின் மூலம் (ரோம 3:24) அவர் மரணம், (3:25; 5:8) உயிர்த்தெழுதல் (5:10) தொடர்ந்து விசுவாசிகளுக்காக வேண்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் (எபி 7:25) தருகிறார்.


2) இரட்சிப்பின் இரண்டு பக்கங்கள், இரட்சிப்பு, கிருபையின் மூலம், கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தைக் கொண்டு பெற்றுக் கொள்ளப்படுகிறது. (ரோம 3:22,24-25,28) அதாவது, அது தேவ கிருபையின் விளைவாகவும் (யோவா 1:16) அதற்கு மனிதரளிக்கும் பதிலான விசுவாசத்தினாலும் வருகிறது. (அப் 15:31, ரோம் 1:17; எபே 1:15; 2:8).


3) இரட்சிப்பின் மூன்று நிலைகள்: 

அ) இரட்சிப்பின் கடந்தகால நிலையில் விசுவாசிகள் தாம் பெறும் பாவ மன்னிப்பின் சொந்த அனுபவம் உள்ளடங்குகிறது. (அப் 10:43; ரோம 4:6-8) அதோடு, ஆவிக்குரிய மரணத்திலிருந்து ஆவிக்குரிய ஜீவனுக்குள்ளும் (1 யோவா 3:14;) பாவத்தின் வல்லமையிலிருந்து, ஆண்டவராகிய இயேசுவின் வல்லமைக்குள்ளும் (ரோம 6:17-23), சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தேவனுடைய ஆதிக்கத்துக்குள்ளும் (அப் 26:18) கடந்து வருகிறோம். அது நமக்கு தேவனோடு ஒரு புதிய தனிப்பட்ட ஐக்கியத்தைக் கொண்டு வருகிறதோடு (யோவா 1:12), நம்மைப் பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கிறது. (ரோம 1:16; 6:23; 1கொரி 1:18) 


ஆ) இரட்சிப்பின் நிகழ்காலநிலை, 


நம்மைப் பரிசுத்தாவியினால் நிறைத்து பாவத்தின் பழக்கத்திலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் இரட்சிக்கிறது. அதில் அடங்கியவை பின் வருமாறு: 

1) தேவனை நம் பிதாவாகவும், இயேசுவை நம் ஆண்டவரும், இரட்சகருமாக ஆளுக்கு ஆள் தொடர்பு கொள்ளும் சிலாக்கியம் (மத் 6:9; யோவா 14:18-23; கலா 4:6ன் பகுறிப்பைப் பார்க்கவும்) 


ii) நாம் பாவத்துக்கு மரித்தவர்களாக நம்மை எண்ணும் படிக்கும் (ரோம 6:1-14) பரிசுத்தாவியின் வழிநடத்துதலுக்கும் (ரோம 8:1-17) தேவனுடைய வார்த்தைக்கும் நம்மை ஒப்புக் கொடுக்கவும் (யோவா 8:31: 14:21; 2 தீமோ 3:15-15) நாம்பெறும் அழைப்பு,


iii)  பரிசுத்தாவியினால் நிரப்பப்பட அழைப்பும், நிரப்பப்பட்ட நிலையைக் காத்துக்கொள்ள கட்டளையும் (அப் 2:33-39; எபே 5:18;)


 iv) பாவத்திலிருந்தும் (ரோம 6:1-14) தற்போதுள்ள கெட்ட தலைமுறையினரிடமிருந்தும் (அப் 2:40; 2 கொரி 6:17) நாம் பிரிந்துபோக உரிமைக்குரல் எழுப்புவது. 


V) தேவனுடைய இராஜ்யத்திற்காக, சாத்தானுக்கும், அவனுடைய பிசாசின் சேனைகளுக்கும் விரோதமாக தொடர்ந்து யுத்தம் செய்ய அழைப்பு. 

(2 கொரி 10:4-5; எபே 6:11,16;

1 பேதுரு 5:8)


3) இரட்சிப்பின் வருங்கால நிலையில் (ரோம 13:11-12;

1தெச 5:8-9; 1பேது 1:5) பின்வருபவை அடங்கியுள்ளன: 


I) தேவனுடைய வருங்கோபத்திலிருந்து நமக்கு விடுதலை, (ரோம 5:9, 

1கொரி 3:15, 5:5; 1தெச 1:10, 5:9)


 ii) தெய்வீக மகிமையில் பங்கெடுப்பதும், (ரோம 8:29;

 1கொரி 15:49) உயிர்த்தெழுந்த அல்லது மறுரூபமான ஒரு சரீரத்தைப் பெறுவதும். (1கொரி 15:52)


iii) நாம் விசுவாசத்தினால் ஜெயங் கொண்டவர்கள் என்பதற்காகப் புரிசுகளைப் பெறுதல், (வெளி 2:7) இந்த வருங்கால இரட்சிப்புதான் எல்லா கிறிஸ்தவர்களும் பிரயாசப்படும் இலக்காகும். 

(1கொரி 9:24-27; பிலி 3:6-14) தற்போதுள்ள எச்சரிக்கைகள், ஒழுங்குமுறை தண்டனையாவும் விசுவாசிகள் வருங்கால இரட்சிப்பை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தைக் உடையவைகளாக உள்ளன. 

(1கொரி 5:1-13; 9:24-27; பிலி 2:12,16; 2 பேது 1:5-11; எபி 12:1 ன் குறிப்பைப் பார்க்கவும்).


மீட்பு:

 "மீட்பின்"(கிரே.அப்போலுதுரோசிஸ்) மூல அர்த்தம் விலைக்கிரயம் கொடுத்து பரிகாரம் செய்தலாகும். இந்த சொற்றொடர் எந்த மூலதனத்தை வைத்து இரட்சிப்பு சம்பாதிக்கப்பட்டது. அதாவது, எந்த பரிகாரம் செலுத்தப்பட்டது என்பதைக் குறிக்கிறது. மீட்பின் உபதேசத்தைக் கீழ்க்கண்டவாறு சுருங்கக் கூறலாம்.


1) நாம் எப்படிப்பட்ட பாவநிலையிலிருந்து மீட்கப்பட வேண்டியவர்களாய் இருக்கிறோம்; மனிதர் தேவனை விட்டு விலகி (ரோம 3:10-18) சாத்தானின் வல்லமையான ஆதிக்கத்தின் கீழ் சிறையாகி (அப் 10:38, 26:18) பாவத்துக்கு அடிமைகளாகி (ரோம 6:6; 7:14) அதின் குற்றவுணர்ச்சி, தண்டனை, வல்லமை மிலிருந்து விடுவிக்கப்படவேண்டிய அவசியமுடையவர்களா யிருக்கிறார்கள் என்று பதிய ஏற்பாடு கூறுகிறது.

 (அப் 26:18; ரோம 1:18, 6:1-18,23; எபே 5:8 கொலோ 1:13; 1 பேது 2:9).


2) அடிமைத்தளத்திலிருந்து நம்மை விடுதலை செய்யும்படி கொடுக்கப்பட்ட விலைக்கிரயம்: 


கிறிஸ்து தம்முடைய இரத்தத்தை சிந்தி, ஜீவனைக் கொடுத்ததால் விலைக்கிரயம் கொடுத்து நம்மை மீட்டார், (மத் 20:28; மாற் 10:45; 1கொரி 6:20; எபே 1:7; தீத் 2:14; எபி 9:12; 1 பேது 1:18-19)


3) மீட்கப்பட்டவரின் முடிவான நிலை: 

                        கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட விசுவாசிகள், இப்போது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும், குற்றவுணர்ச்சியிலிருந்தும், பாவத்தின் வல்லமையிலிருந்தும் விடுதலையடைந்திருக்கிறார்கள். (அப் 26:18; ரோம 6:7,12,14,18;கொலோ 1:13). இவ்வாறு பாவத்திலிருந்து விடுதலை பெற்றபோதிலும் நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களாகி இருப்பதால், நாம் விரும்பியதை மனம்போன போக்கில் செய்ய அப்படியே விட்டு விடப்படவில்லை. பாவத்திலிருந்து விடுதலை பெற்றதால், நாம் மனமுவந்து தேவனுடைய அடிமைகளாகும்படி நம்மை (அப் 26:18; ரோம 6:18,22; 1கொரி 6:19-20;7:22-23) ஒப்புக்கொடுக்கிறோம்.


4) பழைய ஏற்பாட்டின்படியுள்ள மீட்பு,

                       புதிய ஏற்பாட்டின் போதனைப்படியுள்ள மீட்புக்கு நிழலாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டிலுள்ள மிகப்பெரிய மீட்பின் சம்பவம், எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாகும் (யாத் 6:7) மேலும் பலியிடும் முறையின்படியாக, மிருகங்களின் இரத்தம் பாவத்துக்குப் பரிவாரமாக கொடுக்கப் பட்ட விலைக்கிரயமாயிருந்தது. (லேவி 9:8).


நீதிமானாகுதல்: 

                      "நீதிமானாக மாற்றுதல்" என்பது "தேவனுடைய பார்வையில் நீதிமானாய் இருத்தல்" என்று பொருள்படும். (ரோம் 2:10) கிரேக்க மொழியில் இதை "டிகாயூ" என்பர். இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம். (ரோம 5:10-19) "சரியானவர்கள் என்று உறுதிப்படுத்தல்" அல்லது 'சரிப்படுத்துதல் அல்லது சரி செய்தல்". அது, வெறுமனே சட்டரீதியாக, நீதிமுறைப்படி பெற்ற அறிக்கை என்பதைவிட தேவனோடு சரியான உறவு கொண்டிருப்பதை மேலானதாகக் குறிக்கிறது. தேவன், நியாயப் பிரமாணத்தின்படி குற்றஞ் சாட்டப்பட்ட நித்திய மரணத்துக் கென்று ஆக்கினைத்தீர்ப்பு பெற்ற பாவிகள் மனந்திரும்புகிறபோது அவர்களுடைய பாவத்தை மன்னித்து, தெய்வீக அன்புக்கு மறுபடியும் பாத்திர வான்களாகி தம்மோடும், தம் சித்தத்தோடும் அவனுக்கு ஒரு சரியான உறவை (ஐக்கியத்தை) உண்டாக்குகிறார். அப்போஸ்தலனாகிய பவுல், நீதி மானாகுதல் பற்றியும், அது எப்படி நிலைவேறுகிறது என்பதைப் பற்றியும் சில உண்மைகளை வெளிப்படுத்துகிறான்.


  • தேவனோடு ஒப்பாவாதல் என்பது ஒரு வரம் (ரோம 3:24; எபே 2:5) ஒருவரும் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டதினாலோ, நற்கிரியைகளைச் செய்ததினாலோ தம்மை பூரணமாக தேவனோடு ஒப்புரவாகச் செய்ய முடியாது ஏனென்றால் (ரோம் 4:2-5) "எல்லோரும் பாவஞ் செய்து தேவமகிமையற்றவர்களாகி" (ரோம 3:23) என்று கூறப்பட்டுள்ளது.
  • தேவனோடு ஒப்புரவாகுவது "கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு"நடைபெறுகிறது. (ரோம 3:24) கிறிஸ்துவினால் பாலத்திலிருந்தும், அதன் வல்லமையிலிருந்தும் மீட்கப்படாதவர்கள் நீதிமான்களாக்கப்பட முடியாது.

  • தேவனோடு ஒப்புரவாகுவது "அவருடைய கிருபையினாலும்" இயேசு கிறிஸ்துவை ஆண்டவரும் இரட்சகருமாக பற்றிக்கொண்டு, விசுவாசத் தினாலே அவரைத் தமக்கு சொந்தமாக்கிக் கொள்வதின் மூலமும் வருகிறது. (ரோம 3:22-24;4:3-5;) 


4) தேவனோடு ஒப்புரவாகுவது, 


நம் பாவம் மன்னிக்கப்படும் செயலோடு தொடர்புடையது. (ரோம 4:7) பாவிகள், குற்றவாளிகளாகத் தீர்க்கப்படு கின்றனர். 

(ரோம 3:9-18,23) ஆனால், கிறிஸ்துவின் பிராயச்சித்த மரணத்தினாலும், உயிர்த்தெழுதலினாலும், அவர்கள் மன்னிப்பை அடைகிறார்கள். (ரோ 3:25; 4:5,25; 5:6-9)  பார்க்கவும்.


5) கிறிஸ்துவினால் விசுவாசத்தின் மூலம் நாம் தேவனோடு ஒப்புரவாகும்போது, நாம் சிலுவையிலறையப்படுகிறோம். அதனால் கிறிஸ்து நம்மில் வாசஞ்செய்ய வருகிறார். (கலா 2:16-21) இந்த அனுபவத்தின் மூலம், நாம் நீதிமான்களாக்கப்பட்டு, தேவனுக்கென்று வாழ ஆரப்பிக்கிறோம். (2:10-21). ஆவியானவரின் மூலம் நம்மில் கிறிஸ்து மறுரூபமாக்குதலின் செய்யும் கிரியையை (2 தெச 2:13; 1 பேது 1:2) நம்மில் கிறிஸ்து நடப்பிக்கும் மீட்பின் கிரியையிலிருந்து வேறுபடுத்த முடியாது. கிறிஸ்துவின் வேலையும் ஆவியானவரின் வேலையும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது.

என்பதை புரிந்து கொண்டு நம்முடைய வாழ்க்கையில் இரட்சிக்கப்பட்ட அனுபவத்தை வெளிப்படுத்துவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை