Posts

Showing posts from 2025

ஜெபமே ஜெயம்

  *(420) உயர்ந்த முத்துக்கள்* *ஜெபமே ஜெயம்.* பால் யாங்கி சோ ஊழியம் ஜெபத்தினால் மட்டுமே வளர்ந்தது என்று பேசப்படுகிறது. ஜெபத்தினால் மாத்திரம் அல்ல கடினமான உழைப்பு. அது பால் யாங்கி சோ வால் அல்ல அவருடைய மனைவியின் அம்மா (மாமியார்)மூலமாக சபை அசாதாரணமான வளர்ச்சி அடைந்தது. பால் யாங்கி சோவுக்கு அழைப்பும்,தரிசனமும் இருந்தது. ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற பாரமும் அதிகமாக இருந்தது. அதிலேயே தன் நேரத்தையும் காலத்தையும் கடத்தினார். மனைவியை கவனிக்கவில்லை மனைவியின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அவர்களுடைய மாமியார் தன் மருமகன் பால் யாங்கி சோவை மனைவியை கவனிக்க வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் அந்த ஊழியத்தை கையில் எடுத்துக் கொண்டார். விளைவு, பல நூறு (செல் குழுவை) வீட்டு சபைகளை ஆரம்பித்தார். சபை மாபெரும் வளர்ச்சி நோக்கி பயணித்தது. பால் யாங்கி சோ வின் ஊழிய வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள், அவர் நிறுவிய யோய்டோ முழு சுவிசேஷ சபை (Yoido Full Gospel Church) உலகின் மிகப்பெரிய சபையாக உயர்ந்தது, அவரது சீடத்துவத்திற்கான 'செல் குழு' (cell group) முறை, மற்றும் கொரியப் போரு...

நல்ல போராட்டம்

 *(419) உயர்ந்த முத்துக்கள்* *நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.* (2 தீமோ4:7;1தீமோ 6:12; 1:18 *இந்த நல்ல போராட்டத்தை தீமோத்தேயிடம் ஒப்புவித்த பவுல்*) இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகள் கிறிஸ்துவ மார்க்கத்தை பரப்புவதோடு, கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தம் (சாதி ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு), *"ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டம்"*  மற்றும் *பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடினர்,*  ஆனால் அவர்கள் மீது *கலாச்சார அழிப்பு, மதமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளும் உண்டு;*  அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக விமர்சனங்களும், அதே சமயம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களும் உண்டு, ஆனால் அவர்கள் பலத்த எதிர்ப்பையும், persecution-ஐயும் எதிர்கொண்டனர், குறிப்பாக பழங்குடி மற்றும் தலித் பகுதிகளில்.  மிஷனரிகளின் பங்களிப்புகள் மற்றும் போராட்டங்கள்: *கல்வி மற்றும் சுகாதாரம்:*  ஆங்கிலேய கல்வி முறையை அறிமுகப்படுத்தினர், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை நிறுவினர், அறிவியல் மற்றும் கணித பாடங்களை புகுத்தினர். கல்விப்...

கிறிஸ்துவை அறிகிற அறிவு

 *(418) உயர்ந்த முத்துக்கள்.* *இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவு.* தேவனுடைய பிள்ளைகளுக்கு பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களை பற்றிய செய்தியே 99% சதவீதம் பிரசிங்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்தி   1% சதவீதமே, ஆனால், பரிசுத்த ஆவியானவர், பிதாவையும், குமாரன் இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என போதிக்கிறார். (யோவா 17:3) அப்,பவுல் மூலமாக  (1 கொரி 2:2)ல்,   இயேசுகிறிஸ்துவை, "சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்."எனக் கூறுவதை கவனிக்கிறோம். இன்றைக்கு திருச்சபையில் ஒரு பரிதாபமான நிலை என்னவென்றால் ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யோசேப்பு, மோசே, யோசுவா, நெகேமியா, எஸ்றா,தீர்க்கதரிசிகள், இவர்களை அறிந்த அளவிற்கு இயேசு கிறிஸ்துவை சபை அறியவில்லை. தற்போது கேட்கிற செய்திகள், மற்றும் பாடல்கள் கிறிஸ்துவை பிரதிபலிப்பாக இல்லை. பிறகு எப்படி ஒருவன் கிறிஸ்துவை அறிந்து கிறிஸ்துவை பின்பற்ற முடியும் ? பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிப்பது. சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, *"தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து,"...

கிறிஸ்மஸ்

417) உயர்ந்த முத்துக்கள். கிறிஸ்துமஸ்  என்றாலே, நம்முடைய நினைவுக்கு வருவது, இவைகள் தான். அதாவது, ​ நட்சத்திரம். ​ மாட்டு குடில்  பிறந்த குழந்தையின் உருவம். ​ வீட்டின் அலங்காரம். சபை அலங்காரம். ​ கிறிஸ்துமஸ் மரம் . ​ கிறிஸ்மஸ் தாத்தா. ​ இனிப்பு வழங்குதல். ​ மதுபானம் அருந்துதல்.      1.)'நட்சத்திரம்', இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிற ஸ்தலத்திற்கு வழிகாட்டியாக இருந்தது . இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. ​ (மத்தேயு 2:9) அதுபோலவே, இன்றைக்கு இயேசு கிறிஸ்துவை, சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய பிள்ளைகளாக வாழ்கின்ற அத்தனைப் பேர்களும், இயேசு கிறிஸ்துவிடும் வழி காட்டுகின்ற நட்சத்திரங்களே. (உபா 1:10;தானி 10:3). ஆனால் நாம் யாருக்குமே வழி காட்டாத உபயோகம் இல்லாத ஒரு நட்சத்திரத்தை விக்கிரகமாக நம் வீடுகளில் மேல் வைத்திருக்கிறோம்.(அப் 7:43)ஐ வாசிக்கவும். ​ நாம்தான் நட்சத்திரம். நாமே இருளில் வாழும் ஜனங்களுக்கு வழிகாட்டியான நட்சத்திரம். என்பதை சபை புரிந்து கொள்...

கிறிஸ்தவர்கள் மூலமாக

 *(416) உயர்ந்த முத்துக்கள்.* *கிறிஸ்தவர்கள் மூலமாக தேசத்தில் புரட்சி* *இயேசு கிறிஸ்து:* கிறிஸ்தவத்தின் மூலமாக உலகளாவிய ஆன்மீகப் புரட்சியைக் கொண்டு வந்தவர், இது சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. *அப்போஸ்தலன் பவுலின் புரட்சி என்பது,* யூதர்களின் பாரம்பரிய சட்டங்களை விட, இயேசு கிறிஸ்துவிலுள்ள  * விசுவாசத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு*  (Grace through Faith) என்ற அவரது இறையியல் கருத்து, ஆரம்பகால கிறிஸ்தவத்தில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது; அவர் யூதர்களுக்கு மட்டுமின்றி,  * அனைத்து புறஜாதிகளுக்கும்*  கிறிஸ்தவ செய்தியை எடுத்துச் சென்றதால், இது 'புறஜாதிகளின் அப்போஸ்தலர்' என்று அழைக்கப்பட்டு, கிறிஸ்தவத்தை ஒரு உலகளாவிய மதமாக மாற்றியது.  * பவுலின் புரட்சிகரமான சிந்தனைகள்: சட்டத்தின் நீக்கம்*  (Law vs. Grace): மோசேயின் சட்டத்தை கடைப்பிடிப்பதை விட, இயேசுவின் கிருபையின் மூலமாக மட்டுமே நியாயப்படுத்தப்பட முடியும் என்று வலியுறுத்தினார் (ரோமர் 3:21-24). * உலகளாவிய நற்செய்தி:*  இயேசுவின் செய்தியை யூதர்கள் மட்டு...

காணிக்கை கொண்டு வருகிறான்

415) உயர்ந்த முத்துக்கள். ஒரு காணிக்கை கொண்டு வருகிறான். ( லேவி 1:2) 'காணிக்கை' என்ற (எபிரேய மொழியில் 'கொர்பான்') பெயர் சொல்'கிட்டிச் சேருதல்' என்னும் வினைச்சொல்லுடன் தொடர்புடையது. எனவே காணிக்கை என்பது இஸ்ரவேலின் விசுவாசிகள் தேவனுடைய சமூகத்தில் அவரருகில் வந்து அவருடைய உறவையும், ஆசீர்வாதங்களையும் பெற்று அனுபவிப்பதற்காக அவருக்குப் படைக்கும் ஒரு வெகுமதியாகும். (சங்க 73:28) ​ லேவி 1 ஆம் அதிகாரங்கள் 1 முதல் 7 வரை ஐந்து காணிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன : ​ தகன பலி (லேவி 1:3-17), ​ போஜன பலி (2:1-16), ​ சமாதான பலி (3:1-17), ​ பாவநிவாரண பலி (லேவி , அதிகாரம் 4), ​ குற்ற நிவாரண பலி (லேவி 5:14-6:7; 7:1-7),       2.  காணிக்கை படைத்தவர்களின் நோக்கங்கள் : நன்றி செலுத்துதல், தமது விசுவாசத்தை அறிக்கையிடுதல், தமது உறவை புதுப்பித்துக் கொள்ளுதல், தேவனோடுள்ள பற்றுதலை உறுதிப்படுத்துதல், தமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுதல், காணிக்கைகள் உண்மையில் செயல் முறைப்படுத்தப்பட்ட அவர்களுடைய விண்ணப்பங்களாயிருந்தன. (சங்க 116:17;ஒசியா 14:2;எபி 13:5).  ...

கண்காணியானவன்

 (414) உயர்ந்த முத்துக்கள். கண்காணியானவன், ஐயர், மேய்ப்பர்கள் "கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்". (1 தீமோத்தேயு 3:1-2) ஒரு மனிதன் "கண்காணி"யாக விரும்பினால் (கிரே.எபிஸ்கோபோஸ், அதாவது ஐயர் சம்பந்தமான மேற்பார்வை; ஒரு ஐயர்). அவன் ஒரு முக்கியமான வேலையை விரும்புகிறான். (1தீமோ 3:1). ஆனாலும் அப்படிப்பட்ட மக்களின் அந்த விருப்பம் தேவனுடைய வார்த்தையாலும் திருச்சபையாலும் உறுதி செய்யப்பட வேண்டும்,(1தீமோ3:1-10;4:12). ஏனெனில் திருச்சபைக்கென்று சில திட்டவட்டமான தகுதிகளை நிறுவியுள்ளார். ஐயருடைய வேலையைச் செய்யும்படி தேவனுடைய அழைப்பு உள்ளது என்று அறிக்கை பண்ணுகிறவர்கள், சபை அங்கத்தினரால் வேதாகமத்தில் (1தீமோ) 3:1-13;4:12;தீத்1:5-9) கூறும் தகுதிகளுக்கு ஏற்றவாறு உள்ளதா என்று சோதிக்கப்பட வேண்டும்.  திருச்சபையானது ஒரு மனிதனுடைய விருப்பம், கல்வி, பாரம...

உம்முடைய வழிகளை

  உம்முடைய வழிகளை எனக்கு தெரிவியும் (சங் 25:4) மோசேயைப் போல (யாத் 33:13) சங்கீதக்காரன் மனப்பூர்வமாக கர்த்தரை தேட வாஞ்சித்தான். தேவனுடைய நடவடிக்கைகளைப் பற்றிய சிலவற்றை விசுவாசிகள் அறிந்து கொள்ளக்கூடும்.  (உதாரணமாக. இரட்சிப்பு, அற்புதங்கள், சங் 103:7), ஆனால் தேவனையோ அல்லது அவருடைய வழிகளையோ முழுவதும் அறிவதென்பது உண்மையில் ஒருபோது இயலாது.  (அதாவது நம்மில் கிரியை செய்வதிலும், நம்மை வழி நடத்துவதிலும் உள்ள விவேகத்தின் தத்துவங்களை). தேவனுடைய வழிகளை அறிந்து கொள்வதற்கான இந்த சங்கீதத்தில் உள்ள அடிப்படை தத்துவங்கள் பின்வருமாறு: 1) தேவனுடைய நீதியான வழிக்குள்ளும், மற்றும் அவருடைய வார்த்தையின் சத்தியத்திற்குள்ளும் நடத்தப்படுவதற்குரிய ஒரு உண்மையான ஆவல் நமக்கு இருக்க வேண்டும். (சங் 25:4). 2)"நாள் முழுவதும்"நமது நம்பிக்கையே தேவன் மேல் வைப்பதற்கு நாம் ஆவலோடு இருக்க வேண்டும். 3) நாம் தாழ்மையுடன் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். (சங் 25:9). தேவ பக்தியுள்ள வாழ்க்கைக்கும் மற்றும் கர்த்தருக்குப் பயப்படவும்  (சங் 25:12-14) நம்மை ஒப்பு கொடுக்க வேண்டும் (சங் 25:10). 4)  தேவனையும் ...

வீட்டாரே சத்துரு

  ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. (மத்தேயு 10:36) வேதத்தில் இரண்டு வித சத்துருக்கள் உண்டு. (1) வீட்டார்கள். (2) சத்துரு பிசாசு; (மத்தேயு 13:39) நாம் பார்க்கப்போவது ஒருவருக்கு வீட்டாரே சத்துரு. வேதத்தில் நல்ல சகோதரன், சகோதரிகளை குறித்து வாசித்திருக்கிறோம். உதாரணமாக ஆரோன்,மோசே, மரியம், புதிய ஏற்பாட்டில். மார்த்தாள், மரியாள்,லாசர் இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளை பார்க்கும் பொழுது எவ்வளவு அன்பு, பாசம், ஒவ்வொருவருக்கும் இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். (யாத் 2ஆம் அதிகாரம்.யோவான் 11 ஆம் அதிகாரம்) முழுவதும் வாசித்தவர்கள் புரிந்து கொள்ளலாம். லாசருக்கு கிடைத்த இரண்டு அக்கா போல ஒரு தம்பிக்கு கிடைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.! எனக்கும் ஒரு அக்காவும், ஒரு தங்கையும், ஒரு தம்பியும் உண்டு. இவர்களுடைய சண்டையில் தம்பி தற்கொலை செய்து கொண்டான். கடைசியில் பிறந்தவன் முதலாவதாக மரித்தான். அவனுடைய மரணம் என் வாழ்க்கையில் பெரிய இழப்பு இன்றுவரை. அடுத்து இருப்பது அக்கா,தங்கை, அவ்வளவுதான். நான் ஊழியத்தில் இருக்கிறேன். என் அக்கா தங்கை வீட்டில் நடக்கும் அநேக விஷேசங்களில் என...

உணர்ச்சி இல்லாத பாடல்கள்

 உலகத்தார் பாடல்களில் உணர்ச்சிபூர்வமான எழுச்சி இருந்தது அன்று ஆதலால் ஒரு சுதந்திரப் போராட்டம் நடந்தது. தமிழகத்தில் புரட்சியைத் தூண்டிய பாடல்கள் பல கவிஞர்களின் எழுத்துக்களில் இருந்து வந்தன. குறிப்பாக, உடுமலை நாராயண கவி போன்றோர் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும், சமதர்மக் கொள்கைகளையும் திரைப்படப் பாடல்கள் மூலம் பரப்பி புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டனர், அதேபோல், நாமக்கல் கவிஞர் தேசபக்திப் பாடல்கள் பாடி விடுதலைப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தார். மேலும், பாரதியார் போன்ற கவிஞர்களின் தேசிய உணர்வு மிக்க பாடல்கள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றோரின் பகுத்தறிவு சார்ந்த கவிதைகள் எனப் பலதரப்பட்ட படைப்புகள் புரட்சி உணர்வை உருவாக்கின.  அன்றைய தேவ ஊழியர்கள் பாடல்கள் மற்றும் கருத்துக்கள் மூலமாக உணர்ச்சிபூர்வமான எழுச்சி இருந்தது. ஆதலால் சபைக்கு கிடைத்தது ஒரு மறுமலர்ச்சி.  *கிறிஸ்தவத்தில்* பாடல்கள் மூலமாகப் புரட்சியை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் *மார்ட்டின் லூதர் (Martin Luther).  சீர்திருத்தப் புரட்சி (Reformation):*  16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திர...

உங்களை பாவத்திற்கு

  *உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள்.* (ரோமர் 6:11) 6ம் அதிகாரத்திலுள்ள அடிப்படை விவாதம் கிறிஸ்துவின் மரணத்திலும், ஜீவனிலும் விசுவாசிக்கு அவரோடுள்ள ஐக்கியம் பற்றியதாகும். ஆகவே, நீ ஒரு உண்மையான விசுவாசியாயிருந்தால், நீ பாவத்துக்கு மரித்திருக்கிறாய். இந்த விஷயத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும். நீ பாவத்திற்கு மூன்று வழிகளில் மரித்திருக்கிறாய். 1) நீ தேவனுடைய பார்வையில் பாவத்துக்கு மரித்திருக்கிறாய். நீ கிறிஸ்துவோடு சிலுவையில் மரித்து அவருடைய உயிர்த்தெழுதலால் எழுப்பப்பட்டிருக்கிறாய் என்று  (ரோம 6:5-10) தேவனால் கருதப்பட்டிருக்கிறாய்.  2) நீ, ஆவியானவரால் மறுபடியும் பிறந்த போது பாவத்துக்கு மரித்திருக்கிறாய். பாவத்துக்கு எதிர்த்து நிற்கவும்(ரோம 6:14-18) அதின் தீய இச்சைகளுக்கு அனுதினமும் சாகவும்(ரோம 8:13;) தேவனுக்கு கீழ்ப்படிந்து புதிய வாழ்க்கை வாழவும் (ரோம 6:5-14,18,22;) கிறிஸ்துவின் அதிகார உனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 3) நீ பாவத்துக்கு மரித்ததையும் அதை தள்ளிவிட்டு, கிறிஸ்துவுக்காக வாழ உன்னை ஒப்புக்கொடுத்ததையும் அறிக்கை செய்தபடியால், தண்ணீர் ஞானஸ்நானத்தினால் நீ ...

பொய் சாட்சி

 (413)உயர்ந்த முத்துக்கள் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக (யாத் 20:16) பரிசுத்த வேதாகமத்தில் வெகுமதி கிடைப்பதற்காக தாவீதினிடத்தில் பொய்யாகிய கட்டுக் கதையைச் சொன்னான். சவுல் ராஜாவை நான்தான் கொன்றேன் என்று தாவீதிடம் பொய் சொன்னான்  (2சாமு 1:9,10). பொய்களை பேசுகிறவன் தப்புவதில்லை அவன் நாசம் அடைவான். (நீதி 19:5,9).                   பொய் பேசுகிறவன் தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்(யோவா 8:44) ஆனால் பரிசுத்த ஆவியானவர் (1சாமு 31:3-6) வசனங்களை தெளிவுபடுத்தியுள்ளார். (3)சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, (4)தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதன்மேல் விழுந்தான். (5)சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, ​​அவனு...

கிறிஸ்துவின் வருகையில் அடுத்தடுத்து நடப்பது என்ன

 (406) உயர்ந்த முத்துக்கள். பரிசுத்தமான கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் வருகையில் உயிரோடு எழும்பும் பொழுது அடுத்தடுத்து நடப்பது என்ன. ? (1 தெசலோ 4:16) இதை அறிவதற்கு முன்பு சில காரியங்களை நாம் பார்த்து விட்டு அடுத்த காரியங்களுக்கு தொடர்ந்து பயணிப்போம். ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் சிந்திக்க வேண்டியவைகள். எந்த மார்க்கத்திலும் சொல்லப்படாத ஒன்றை இயேசு கிறிஸ்து மூலமாக பிதாவாகிய தேவன் நமக்குச் சொல்லியிருக்கிறார். அதுதான் கிறிஸ்து இயேசு மூலமாக கிடைக்கிற நித்திய வாழ்வு, அல்லது மறுவாழ்வு. இதுதான் கிறிஸ்தவர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாகும்.  (யோவா 5:24; 6:47,54; 17:3; ரோமர் 6:23; 1யோவா 1:2; 5:11,13) இந்த, நித்திய நம்பிக்கை தேவனுடைய வசனத்தை உறுதியாக விசுவாசிக்கிறவர்களிடம் தான் இருக்கும்.(அப் 13:48). (1) இந்த பரம சிலாக்கியத்தை அடைவதற்கு முதலாவது பாவத்திற்கு மரணம், நீதிக்கு பிழைத்தவர்களாக இருக்க வேண்டும். (ரோம் 6:11,13) தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருப்பவர்கள், தேவனுடைய ராஜ்யத்தை சுதந்திரமாக்க முடியாது. (1கொரி 6:9-10;கலா 5:21) நித்திய ஜீவனை சுதந்திரமாகக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட...

தகப்பனும் தாயும்

(412) உயர்ந்த முத்துக்கள். *"என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்", கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.* (சங்கீ 27:10) "தந்தை தாய் கைவிட்டாலும்" என்ற சொற்றொடர், வாழ்க்கையின் கடினமான காலங்களில் எவ்வளவு ஆதரவு கிடைத்தாலும், நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறது. உலகமே உங்களை கைவிட்டாலும், உங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.  * அறம் மற்றும் நம்பிக்கை:*   இந்தச் சொற்றொடர் பெரும்பாலும் நம்பிக்கையும், விடாமுயற்சியும் முக்கியம் என்பதை உணர்த்துகிறது. உங்கள் பெற்றோர் கைவிட்டாலும், வேறு யார் உங்களைக் கைவிட்டாலும், தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. கர்த்தருடைய ஆவியானவரால் எழுதப்பட்ட வார்த்தைகள் எவ்வளவு உண்மையும் சத்தியமாக இருக்கிறது. பரிசுத்த வேதாகமம் கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் அல்ல, அது முழு உலக மக்களுக்கும் எழுதப்பட்ட புத்தகமாகும். வேதத்தை வாசிக்கும் பொழுது அநேக நல்ல தகப்பன்மார்களை குறித்தும் தாய்மார்களை குறித்தும் வாசிக்கிறோம். அதே நேரத்தில் பிள்ளைகளுக்கு துரோகம் செய்யும் தாய் தகப்பன்ம...

திருச்சபைகளுக்கு ஒரு எச்சரிக்கை

Image
  (411) உயர்ந்த முத்துக்கள்.) *திருச்சபைக்கு ஓர் எச்சரிக்கை* கிறிஸ்துவுக்காக உண்மையும் உத்தமமாக செயல்படும் ஊழியங்கள் இனிவரும் நாட்களில் அதிகமாக சிதறடிக்கப்படும் , அதிக பாடுகளையும், உபத்திரங்களையும், ஏன் மரணத்தையும், திருச்சபை சந்திக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். இயேசு கிறிஸ்து சொன்னார். அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். (மத்தேயு 16:21; லூக் 9:22) இயேசு கிறிஸ்து எந்த வழியாக கடந்து சென்றாரோ அதே வழியாகத்தான் கிறிஸ்துவின் சபையும் கடந்து செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சபை யார் மூலமாக பாதிக்கப்படும் என்பதை நாம் ஆராயுவோம் என்று சொன்னால்.... 1) மூப்பர்கள் அல்லது பாஸ்டர்கள். 2) தலைவர்கள் அல்லது தலைமை போதகர்கள். 3) வேத பாரகர்கள் அதாவது வேதத்தை நன்றாக அறிந்தவர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து திருச்சபையை புறஜாதியார் கையில் ஒப்பு கொடுப்பார்கள். (மத் 20:19; லூக் 18:32; அப் 21:11;) தற்...

உயிர்த்தெழுதலுக்கு முன்னும் பின்னும் நடப்பது என்ன?

 (410) உயர்ந்த முத்துக்கள்.  உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ? சீயோனில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் ரத்தம் தெளிக்கப்பட்டு நாம் ஆசாரியர்களாக, ராஜாக்களாக ஆயிரம் வருடம் கிறிஸ்துவோடு கூட ஆளுகை செய்வோம் என்பதை குறித்து பார்த்தோம். ஆசாரியத்துவ ஊழியத்தை மூன்று காலங்களாக, அதாவது கடந்த(இறந்த) காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகும். 1) கடந்த காலம். பழைய உடன்படிக்கையின் கீழ் உள்ள ஆசாரியர்கள் (யூத மத குருமார்கள்) 10 கட்டளைகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டது, ஆசரிப்புக்கூடாரத்திலும், பின்னர் கோவிலிலும் பலி செலுத்துதல், ஆராதனை நடத்துதல், மற்றும் உடன்படிக்கைப் பெட்டியைப் பாதுகாத்தல் போன்ற கடமைகளைச் செய்தல் வேண்டியிருந்தது. அவர்கள் மக்களுக்கு கடவுளின் சட்டத்தை எடுத்துரைத்து, அவர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் விதமாக பலரின் மூலம் பாவமன்னிப்பு பெற வேண்டும்.  ஆசாரியர்களின் முக்கிய கடமைகளாகும்: பலி செலுத்துதல்: பழைய ஏற்பாட்டின்படி, மக்களுக்குப் பாவமன்னிப்பு கிடைக்க பலியிடும் கடமை ஆசாரியர்களுக்கு இருந்தது. மிருகங்களைப் பலி செலுத்த...

உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன 4

 (409) உயர்ந்த முத்துக்கள். உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ? கடந்த நாட்களில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டுள்ளோம். என்று, மூன்று விதமான முறையில் நாம் கழுவப்படுவதையும் அல்லது சுத்திகரிக்கப்படுவதையும், மாத்திரமல்ல இயேசு கிறிஸ்துவின் இரத்தம், பூமியில் அல்ல, சீயோனில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம் மேல் தெளிவுபடுத்தப்படும் என்பதை நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம். ஆகையால் பரிசுத்த  வேதம் சொல்கிறது. பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; (வெளிப் 14:13) ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலில் எழுந்தார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். (1 தெசலோ 4:16-17) இயேசு கிறிஸ்து யாருக்காக வருவார் ? கிற...