Posts

Showing posts from 2026

ஈரான் (ஏலாம்) இஸ்ரேல் யுத்தம்.

Image
ஈரான் (வேதாகமத்தில்  பெர்சியா அல்லது  ஏலாம் என அழைக்கப்படுகிறது) மற்றும் இஸ்ரவேல் இடையேயான போர் குறித்து பரிசுத்த வேதாகமம் பல தீர்க்கதரிசனங்களைக் கொண்டுள்ளது. தற்கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அதன் சில முக்கிய குறிப்புகள் :  1. கோகு-மாகோகு யுத்தம்  (எசேக் 38 & 39) கடைசி நாட்களில் இஸ்ரவேலுக்கு எதிராக எழும்பும் ஒரு பெரிய கூட்டணியில் ஈரான் முதன்மையான பங்கெடுக்கும் என வேதாகமம் கூறுகிறது.  வசனம்:  "பெர்சியரும் (Persia/Iran), எத்தியோப்பியரும், லூபியரும் அவர்களோடேகூட இருப்பார்கள்..."  (எசேக் 38:5). தீர்க்கதரிசனம்:  இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தேசத்திற்குத் திரும்பி, சுகமாய் வாசம் பண்ணும்போது, வடதிசையிலிருந்து வரும் ஒரு பெரிய கூட்டத்தோடு சேர்ந்து ஈரான் இஸ்ரவேலைத் தாக்கும். தற்கால நிகழ்வு:  1948-ல் இஸ்ரவேல் மீண்டும் நாடாக உருவானது இந்தத் தீர்க்கதரிசனத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் (ஹமாஸ், ஹிஸ்புல்லா) இஸ்ரவேலுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படுவது இந்த வசனங்களுடன் ஒப்பிடப்படுகிறது....

இயேசுவை சுவாமி என்று சொல்லலாமா ?

Image
  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை 'சுவாமி' (ஆண்டவர்/கர்த்தர்) என்று அழைப்பது பரிசுத்த வேதாகமத்தின்படி முற்றிலும் சரியானது. 'சுவாமி' என்ற சொல்லுக்கு 'எஜமான்' அல்லது 'ஆண்டவர்' என்று பொருள். வேதாகம ஆதாரங்களுடன் சில குறிப்புகளுடன் : இயேசுவே அதை உறுதிப்படுத்தியுள்ளார்:  சீடர்கள் தன்னை 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' (சுவாமி) என்றும் அழைப்பதை இயேசு ஏற்றுக்கொண்டார். "நீங்கள் என்னை போதகரென்றும், ஆண்டவரென்றும் (சுவாமி) அழைக்கிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்"  (யோவான் 13:13). தோமாவின் அறிக்கை:  உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டபோது சீடனாகிய தோமா,  "என் ஆண்டவரே! என் தேவனே!"  (My Lord and my God) என்று பணிந்து கூறினார் (யோவான் 20:28). இரட்சிப்புக்கு அவசியம்:  இயேசுவை 'சுவாமி' (ஆண்டவர்) என்று அறிக்கையிடுவது இரட்சிப்பின் அடிப்படைத் தேவையாகும்.  "இயேசுவை ஆண்டவரென்று உன் வாயினாலே அறிக்கையிட்டு... விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்"  (ரோமர் 10:9). அனைவருக்கும் ஆண்டவர்:  அவர் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு...

திருச்சபையின் ஊழியங்களுக்கான ஆவிக்குரிய வரங்கள்.

Image
திருச்சபையின் ஊழியங்களுக்கான ஆவிக்குரிய வரங்கள்: எபே 4:13 “அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் கவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.” கொடுக்கிறவர்: எபேசியர் 4:13 ஆம் வசனம் ஆவிக்குரிய வாங்களைப் பட்டியலிடுகிறது. (அதாவது வரம்பெற்ற ஆவிக்குரிய தலைவர்கள்) கிறிஸ்து இந்த வரங்களைத் திருச்சபைக்கென்று அளித்தார். கிறிஸ்து ஏன் இவற்றைக் கொடுத்தார் என்பதற்குப் பவுல் கூறும் காரணங்கள்:  1) தேவனுடைய மக்களை தேவனுடைய ஊழியத்துக்கென்று ஆயத்தப்படுத்த (4:12)  2) கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையின் தேல்னுடைய சித்தத்தின்படியான ஆவிக்குரிய வளர்ச்சிக்காக (4:13-16);  அப்போஸ்தலர்கள்: சில புதிய ஏற்பாட்டு தலைவர்களுக்கு "அப்போஸ்தலர்' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 'அப்போஸ்டெல்லோ' என்னும் வினைச் சொல்லுக்கு, "அனுப்புகிறவருடைய தனிப்பிரதிநிதியாகவும், தூதுவராகவும், ஒரு சிறப்புப் பணிக்காக அனுப்பப்படுகிறவர்" என்று பொருள் உண்டு. இந்தப் பட்டம் கிறிஸ்துவுக்கும்  (எபி 3:1)  12 சீஷர்களுக்கும், (10:2) பவலுக்கும் (ரோம 11, 2 கொரி1:1, கலா...

விசுவாசிகள் ஆவிக்குரியவர்களாக பிரிக்கப்படுதல்

Image
விசுவாசிகள் ஆவிக்குரியவர்களாகப் பிரிக்கப்படுதல் 2 கொரி 6:17-18 “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக் கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும், குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்." தம் மக்களோடு தேவன் கொள்ளும் தொடர்புக்குத் தீமையை விட்டுப் பிரிந்து போகும் எண்ணம், அடிப்படையானதாகும். வேதாகமத்தின்படி, பிரிவினை இரண்டு பரிமாணங்களையுடையது. ஒன்று எதிர்மறையானது. அடுத்தது, உடன்பாடானது.  அ) இயேசு கிறிஸ்துவுக்கும், நீதிக்கும், தேவனுடைய வார்த்தைக்கும் விரோதமாக இருக்கக்கூடிய பாவம், மற்றும் எந்த காரியத்திலிருந்தும், ஒழுக்க நெறியிலும், ஆவிக்குரிய விதத்திலும் நீங்கள் பிரிந்து போவது; ஆ) அர்ப்பணிப்பு, ஆராதனை, ஊழியம் ஆகியவற்றின் மூலம் மிகவும் நெருங்கிய, அன்புள்ள ஐக்கியத்தோடு தேவனிடம் நெருங்கி வருவது. இந்த இரண்டு விதங்களிலும் பிரிந்து போகும்போது, தேவன் நம்முடைய பரலோக பிதாவாய் இருக்கிறார், அவர் நம்மோடு வசிக்கிறார்....

விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு

Image
விசுவாசிகளின் நியாயத் தீர்ப்பு: 2 கொரி 5:10 "ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது, தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்' விசுவாசிகள் ஒரு நாளில் "கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக" நின்று கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று வேதாகமம் போதிக்கிறது. விசுவாசிகளின் நியாயத் தீர்ப்பைப் பொறுத்த மட்டில் பின்வரும் விஷயங்களை மனதிற் கொள்ளவேண்டும். 1) எல்லா கிறிஸ்தவர்களும் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டவர்கள். அதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது.  (ரோம 14:12; 1 கொரி 3:12-15; 2 கொரி 5:10: பிரச 12:14). 2) கிறிஸ்து தம் சபைக்காகத் திரும்பி வரும்போது, இந்த நியாயத்தீர்ப்பு நடைபெறும்.  (யோவா 14:3; 1 தெச.4:14-17). 3) கிறிஸ்துவே நியாயாதிபதி (யோவா. 5:22; 2 தீமோ 4:8). 4) விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு பயபக்தியுள்ளதும், சீரிய முறையிலும் இருக்கும் என வேதாகமம் கூறுகிறது. விசேஷமாக அதில் பழுது அல்லது “நஷ்டம்” இருக்க வாய்ப்புகள்  (1 கொரி 3:15, 2 யோவா 8), "அவர் வருகையில்” அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகக...

சரீர உயிர்த்தெழுதல்

Image
சரீர உயிர்த்தெழுதல்: "1 கொரி 15:35 ஆகிலும் மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே முன்கெய வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்," வேதாகமத்தில் சரீர உயிர்த்தெழுதல் முக்கியமான ஒரு உபதேசமாகும். அது மரித்தோரிலிருந்து ஒருவனுடைய சரீரத்தைத் தேவன் உயிரோடெழுப்பு வதையும், இடைநிலையில் அது பிரிந்து வந்த அந்த மனிதனின் ஆத்துமாவோடும், ஆவியோடும் மறுபடியும் இணைவதையும் குறிக்கிறது. (1) சரீர உயிர்த்தெழுதல் ஏன் தேவையானது என்பதற்கு வேதாகமம் மூன்று காரணங்களை வெளிப்படுத்துகிறது.  (அ) மனிதனின் மொத்த ஆளத்துவத்துக்கு சரீரம் முக்கியமானது. சரீரம் இல்லாமல் மனிதர் முழுமையாக மாட்டார்கள். கிறிஸ்து அருளும் மீட்பு, சரீரம் உட்பட முழு மனிதனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (ரோம 8:18-25;)  (ஆ) சரீரம் பரிசுத்தாவியின் ஆலயம். (1 கொரி 6:19) உயிர்த்தெழுந்தபின் மறுபடியுமாக அது ஆவியானவரின் ஆலயமாய் மாறும்.  (இ) எல்லா நிலைகளிலும் பாவத்தின் பலனைச் சரிக்கட்டும்படி மனிதரின் கடைசி சத்துரு (சரீர மரணம்) உயிர்த்தெழுதலினால் ஜெயங்கொள்ளப்பட வேண்டும்.  (1 கொரி15:26).  (2) பழைய ஏற்பாடும் (...

விசுவாசிகளுக்கான ஆவிக்குரிய வரங்கள்.

Image
விசுவாசிகளுக்கான ஆவிக்குரிய வரங்கள்: 1 கொரி 12:7 "ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது". பொதுவான தோற்றம்: விசுவாசிகளுக்குக் கொடுக்கப்படும் பலவிதமான ஆவிக்குரிய வரங்கள் மூலம் பரிசுத்த ஆவி யானவர் வெளிப்படுகிறார். (1கொரி 12:7) இவ்விதமான ஆவியானவரின் வெளிப்பாடுகள், சபை கட்டுப்படுவதற்கும், அது தூய்மைப்படுத்தப்படுவதற்குமான நோக்கத்தோடு செயல்படுகின்றன.  (1 கொரி 12:7; 14:26) இந்த ஆவிக்குரிய வரங்கள் ( ரோம 12:6-8 இலும் எபே 4:11 இலும்) குறிப்பிடப்பட்டுள்ள வரங்களும் ஊழியமும் போலாவை அல்ல. அதில் ஒரு விசுவாசி சபையில் நிரந்தரமாய் ஊழியஞ்செய்ய வல்லமையும் தகுதியும் பெறுகிறார். 1கொரி 12:8-10ல் கொடுக்கப்பட்ட பட்டியல் பூரணமானதல்ல, வரங்கள் வித்தியாசமான முறையில், சேர்ந்தும் வரும். (1) ஆவியானவரின் சித்தப்படி  (1 கொரி 12:11) தேவைகள் உண்டாகும் போதும், விசுவாசியின் மிகுந்த ஆவலுக்குத் தக்கதாகவும் ஆவியின் வெளிப்பாடுகள் கொடுக்கப்படுகின்றன. (12:31:14:1). (2) சில வரங்கள் ஒழுங்கான அடிப்படையில் சாதாரணமாக ஒரு தனிநபர் மூலம் வெளிப்படலாம். விசேஷ தேவை களுக்கு, ...

மூன்று வகையான மக்கள்

Image
மூன்று வகையான மக்கள்: 1 கொரி 2:14-15 "ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்." அடிப்படையான பிரிவு: மனிதர் யாவரையும் வேதாகமம் இரண்டு வகுப்பினராகப் பிரிக்கின்றது. (1) ஜென்ம சுபாவமுள்ள அல்லது மாம்சீகமான ஆண் அல்லது பெண் என்பது (கிரேக்க மொழியில் சுகிகோஸ்; 1 கொரி 2:14) மறுபிறப்படையாத மனிதரைக் குறிக்கிறது. அதாவது ஒருவர் தம் இயற்கை சுபாவத்தினால் நடத்தப்படுவது.  (2 பேது 2:12) இப்படிப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க மாட்டார்கள் (ரோம 8:9), சாத்தானின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறார்கள். (அப் 26.18) சரீரத்துக்கும், அதன் இச்சைகளுக்கும் அடிமைப்பட்டிருக்கிறார்கள். (எபே 2:3) அவனோ அவளோ உலகத்துக்குச் சொந்தமானவர்கள், அதனிடம் அனுதாபமுள்ளவர்கள் (யாக் 4:4), ஆவியானவருடைய நீதியின் வழிகளைப் புறக்கணிக்கிறவர்கள். (1 கொரி 2:14)...

தேவனுடைய இரட்சிப்பு திட்டத்தில் இஸ்ரயேல்.

Image
தேவனுடைய இரட்சிப்புத் திட்டத்தில் இஸ்ரவேல் ரோமர் 9:6 "தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.” முகவுரை.  ரோமர் 9-11 அதிகாரங்களில் இஸ்ரவேலர் கடந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்காலத்தில் அவர்கள் சுவிஷேத்தைப் புறக்கணிப்பது. அவர்களின் வருங்கால இரட்சிப்பு பற்றிய பிரச்சனைகளைப் பற்றி பவுல் தெரிவிக்கிறான். சுவிசேஷத்தில் இஸ்ரவேலருக்கு எந்தப்பங்கும் இல்லாமலிருக்கும் போது, தேவன் ஆபிரகாமுக்கும், இஸ்ரவேல் ஜனத்துக்கும் கொடுத்த வாக்குத்தத்தங்கள் எப்படி நிறைவேறும் என்று கேள்விகேட்ட யூத விசுவாசிகளுக்கு பதிலளிக்கும்படியாக இந்த மூன்று அதிகாரங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த கட்டுரை பவுலின் விவாதத்தைச் சுருக்கமாகத் தருகிறது. மேலெழுந்தவாரியான கண்ணோட்டம்: தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் இஸ்ரவேலர் பற்றிய பவுலின் விவாதத்தில் மூன்று வெவ்வேறான ஆதாரப்பொருள்கள் உள்ளன. 1) முதலாவது   (ரோம 9:6-29) கடந்த காலத்தில் இஸ்ரவேலர் தெரிந்து கொள்ளப்பட்டது பற்றிய ஆராய்ச்சியாகும்.  அ) 9.6-13ல் இஸ்ரவேல ருக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்...

விசுவாசமும் கிருபையும்.

Image
விசுவாசமும் கிருபையும் ரோமர் 5:21 “ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது போல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது." நம்முடைய இரட்சிப்பு தேவனுடைய கிருபையினாலே ஒரு ஈவாக நமக்கு வருகிறது. ஆனால் மனிதர் தம் விசுவாசத்தின் மூலமாகத்தான் அதைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளமுடியும். இரட்சிப்பின் செயல்முறையை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் இந்த இரண்டு வார்த்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இரட்சிப்புக்கேதுவான விசுவாசம்: இரட்சிப்புக்கென்று தேவன் விரும்பும் ஒரே நிபந்தனை, இயேசு கிறிஸ்துவில் விசுவாசமாகும். விசுவாசம் என்பது இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடுவது மாத்திரமல்லாமல், ஆண்டவரும், இரட்சகருமாகிய கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பும் விசுவாசியின் இருதயத்திலிருந்து வரும் ஒரு கிரியையுமாகும். (மத் 4:19; 16:24; லூக் 9:23-25; யோவா 10:4,27, 12:26; வெளி 14:4)  1) விசுவாசத்தைப் பற்றி பதிய ஏற்பாட்டின் கருத்துப்படி நான்கு முக்கிய மூலக்கொள்கைகள் உள்ளன.   அவை  அ)சிலுவையிலறையப்பட்டு, மரித்தோரிலிருந...

கண்காணிகளும் அவர்களுடைய கடமைகளும்.

Image
கண்காணிகளும், அவர்களுடைய கடமைகளும் அப் 20:28 "ஆகையால் உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுய ரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.. பதவிகள் அளிக்கப்பட்ட தலைவர்கள் இல்லாமல் எந்தத் திருச்சபையும் இயங்க முடியாது. எனவே அப் 14:23 ஆனது, கூறுகிறபடி ஆவியினால் நிறைந்த விசுவாசிகள் ஜெபத்துடனும், உபவாசத்துடனும் தேவனுடைய சித்தத்தை அறிந்து பரிசுத்த ஆவியானவர் (1 தீமோ 3:1-7; தீத் 1:5-9) வசனங்களில் குறிப்பிட்டுள்ள ஆவிக்குரிய கண்காணிகளின் தகுதிகளின்படி, குறிப்பிட்ட சிலரை மூப்பராகவோ, கண்காணிகளாகவோ நியமித்தார்கள். எனவே இறுதியாக ஒரு திருச்சபைக்கு கண்காணியை நியமிப்பது ஆவியானவரே என்று அறிகிறோம். எபேசு சபையில் உள்ள மூப்பர்களுக்குப் பவுல் கொடுத்த கடைசிப் பிரசங்கத்தில்  (அப் 20:18-35) உலகின் எழுத் திருச்சபையில் கண்காணிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குரிய வேதாகமம் சார்ந்த கொள்கைகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. அவர்களுடைய பணி பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் பணியைப் போன்றது. ...

ஆவியில் உண்மையாக ஞானஸ்நானம் பெற்றதைச் சோதித்தல்

Image
ஆவியில் உண்மையாக ஞானஸ்நானம் பெற்றதைச் சோதித்தல்: அப் 10:44-46 "இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்த சேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்துப் பிரமித்தார்கள்.”. பரிசுத்த ஆவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் அனைத்தையும் சோதித்து, அளவிட்டுப் பார்க்க வேண்டும் என்று வேதாகமம் வலியுறுத்துகிறது. (1தெச 5:19-21; 1 கொரி 14:29) "நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்ற சோதித்து அறியுங்கள்." (1 யோவா 4:1) "பரிசுத்த ஆவியினால் பெற்ற ஞானஸ்நானம்" தேவனிடத்திலிருந்து வந்ததா என்று சோதித்தறிய வேதாகமம் கூறும் கொள்ளக்கள் பின்வருமாறு: 1) ஒரு உண்மையான பரிசுத்த ஆவியில் பெற்ற ஞானஸ்நானமாக இருக்குமானால் பிதாவாகிய தேவனையும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் முன்னைவிட அதிகமாக நேசிக்கவும், பெருமைப்படுத்தவும், மகிமைப்...

லூக்கா சுவிசேஷத்தில் இயேசுவின் ஜெபங்கள்.

Image
  ஜெபிக்காமல் எல்லாவற்றையும் துவங்கும் ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் அர்ப்பணம். லூக்கா சுவிசேஷ புத்தகத்தில் இயேசு கிறிஸ்து கிறிஸ்து ஜெபித்த தருணங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன: ஞானஸ்நானத்தின் போது ஜெபம்:  இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜெபித்தபோது, வானம் திறக்கப்பட்டது, பரிசுத்த ஆவி அவர்மேல் இறங்கியது மற்றும் பிதாவின் சத்தம் வானத்திலிருந்து கேட்டது   (லூக்கா 3:21-22). வனாந்தரத்தில் தனித்திருந்து ஜெபித்தல்:  திரளான ஜனங்கள் அவரைக் குணமாக்கும்படி தேடி வந்தபோதும், அவர் வனாந்தரங்களுக்கு விலகிப்போய் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். இது ஊழியத்திற்குத் தேவையான வல்லமையைப் பெற்றுக்கொள்ள உதவியது  (லூக்கா 5:15-16). அப்போஸ்தலர்களைத் தெரிவு செய்வதற்கு முன்:  இயேசு ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனைக் நோக்கி ஜெபம் பண்ணினார். விடிந்தபோது, தம்முடைய சீஷர்களில் பன்னிரண்டு பேரை அப்போஸ்தலர்களாகத் தெரிந்து கொண்டார்  (லூக்கா 6:12-13). பேதுருவின் அறிக்கைக்கு முன்:  அவர் ஏகாந்தமாய் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தபோது...