உயிர்த்தெழுதலுக்கு முன்னும் பின்னும் நடப்பது என்ன?
(410) உயர்ந்த முத்துக்கள். உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ? சீயோனில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் ரத்தம் தெளிக்கப்பட்டு நாம் ஆசாரியர்களாக, ராஜாக்களாக ஆயிரம் வருடம் கிறிஸ்துவோடு கூட ஆளுகை செய்வோம் என்பதை குறித்து பார்த்தோம். ஆசாரியத்துவ ஊழியத்தை மூன்று காலங்களாக, அதாவது கடந்த(இறந்த) காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகும். 1) கடந்த காலம். பழைய உடன்படிக்கையின் கீழ் உள்ள ஆசாரியர்கள் (யூத மத குருமார்கள்) 10 கட்டளைகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டது, ஆசரிப்புக்கூடாரத்திலும், பின்னர் கோவிலிலும் பலி செலுத்துதல், ஆராதனை நடத்துதல், மற்றும் உடன்படிக்கைப் பெட்டியைப் பாதுகாத்தல் போன்ற கடமைகளைச் செய்தல் வேண்டியிருந்தது. அவர்கள் மக்களுக்கு கடவுளின் சட்டத்தை எடுத்துரைத்து, அவர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் விதமாக பலரின் மூலம் பாவமன்னிப்பு பெற வேண்டும். ஆசாரியர்களின் முக்கிய கடமைகளாகும்: பலி செலுத்துதல்: பழைய ஏற்பாட்டின்படி, மக்களுக்குப் பாவமன்னிப்பு கிடைக்க பலியிடும் கடமை ஆசாரியர்களுக்கு இருந்தது. மிருகங்களைப் பலி செலுத்த...