இரட்சிப்புக்கான வேதவார்த்தைகள்
ரோமர் 1:16 "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. தேவன், இயேசுகிறிஸ்துவினால் நித்திய ஜீவனை நமக்கு இலவசமாகத் தருகிறார். ஆனால் அது நமக்குக் கிடைக்கும்படி சரியான முறையை அறிந்து கொள்வது சில வேளைகளில் நமக்குக் கடினமாக உள்ளது. ஆகவே தேவன், வேதாகமத்தில் இரட்சிப்புப்பற்றி, ஒவ்வொன்றும் தன் சொந்த தனிப்பட்ட முறையில் வற்புறுத்தும் வகையிலான பலதரப்பட்ட காட்சிகளைச் சித்தரிக்கிறார், இந்த கட்டுரை, அந்தக் காட்சிகளில் மூன்றான, இரட்சிப்பு, மீட்பு, நீதிமானாகுதல் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது. இரட்சிப்பு: இரட்சிப்பு என்றால் (கிரே,) சொட்டேரியா ""விடுவித்தல்", "பத்திரமாகக் கொண்டுவருதல்", "தீமையினின்று பாதுகாத்தல்" என்று அர்த்தமாகும். ஏற்கெனவே பழைய ஏற்பாட்டில் தேவன் தம்மை, மக்களை இரட்சிக்கிற ஒருவராக வெளிப்படுத்தியுள்ளார். (சங் 27:1; 88:1;உபா 26:8; சங் 62:1; ஏசா 25:6;53:5 குறிப்புகளை பார்க்கவும்) புதிய ஏற்பாட்டில் அது "வழி" அல்லது...